ரிலையன்ஸ் ஜியோவுக்கு ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு!

மே 16, 2019 341

புதுடெல்லி (16 மே 2019): மத்திய பிரதேச தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வைபை வசதி ஏற்படுத்தி கொடுத்ததில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து மத்திய பிரதேச மாநில தலைமை கணக்காளர் எழுப்பியுள்ள ஆடிட்டிங்கில், தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் என்பது முக்கிய ஆவணங்களை கொண்டதாகும். இங்கு தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியதில் பல அரசு ஆவணங்களின் ரகசிய தன்மை குறித்து ஐயம் எழுப்பப் பட்டுள்ளது.

மேலும் இது தவிர மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களின் பாதுகாப்பு செலவுகள், இன்னும் வாக்காளர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்த வசதிகளில் உள்ள முறைகேடுகள் என பல சந்தேகங்களை அந்த ஆடிட்டிங் எழுப்பியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...