மலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளி பிரக்யா சிங் தாகூர் கோட்சேவுக்கு புகழாரம்!

மே 17, 2019 351

புதுடெல்லி (17 மே 2019): மகாத்மா காந்தியை சுட்டு கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர் என்று 2019 மக்களவைத் தேர்தலில் போபால் தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பிரக்யா சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மத்திய பிரதேச மாநில தலைநகர் போபால் மக்களவைத் தொகுதியின் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பிரக்யா சிங் தாக்கூர் போட்டியிடுகிறார்.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே என்ற இந்து என அண்மையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்

கமல்ஹாசனின் கருத்துக்கு பாரதிய ஜனதாக் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரக்யா சிங் தாக்கூர் கோட்சேவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்,

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...