இலங்கைக்கான இந்திய தூதுவருடன் எஸ்டிபிஐ நிர்வாகிகள் சந்திப்பு!

மே 17, 2019 297

புதுடெல்லி (17 மே 2019): இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்த வேண்டும் என்று கோரி, இலங்கைக்கான இந்திய தூதுவரை எஸ்டிபிஐ தேசிய நிர்வாகிகள் இன்று சந்தித்துப் பேசினர்.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் சர்ச் உள்ளிட்ட பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப் பட்ட நிலையில் இதற்கு ஐ எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இதனை தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை கட்டவிழ்த்து விடப் பட்டுள்ளன. பல வணிக நிறுவனங்கள் சூரையாடப் பட்டுள்ளன. மசூதிகள் சேதப் படுத்தப் பட்டுள்ளன. பொதுமக்கள் தொடர்ந்து அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் இலங்கைக்கான இந்திய தூதுவர் ஆஸ்டின் ஃபெர்னாண்டோவை எஸ்டிபிஐ தேசிய நிர்வாகிகள் சந்தித்து இலங்கையில் நடக்கும் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டி கோரிக்கை விடுத்தனர். அதன பெற்றுக் கொண்ட தூதுவர் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

அப்போது எஸ்டிபிஐ தேசிய தலைவர் எம் கே ஃபைஜி, துணைத் தலைவர் தெஹ்லான் பாக்கவி, உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...