ராகுலின் கருத்து பொய்யானது - ஆக்ஸ்போர்டு மொழியாக்கம்!

மே 17, 2019 388

புதுடெல்லி (17 மே 2019): ராகுல் காந்தி கூறிய Modilie என்ற வார்த்தை எங்கள் டிக்‌ஷ்னரியில் இல்லை என்று ஆக்ஸ்போர்டு மொழியாக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேர்தல் பிரச்சாரம் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி Modilie என்ற வார்த்தை டிக்‌ஷ்னரியில் உள்ளது என்றும் மோடி பொய்யானவர் என்பதை குறிப்பதாகவும் அந்த வார்த்தையை சுட்டிக் காட்டி மோடியை விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில் ஆக்ஸ்போர்டு மொழியாக்க நிறுவனம் தானாக முன்வந்து அப்படி ஒரு வார்த்தை இல்லை என்று கூறியுள்ளது.

இதனால் ராகுல் காந்திதான் பொய்யானவர் என்று மோடி ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...