செய்தியாளர்களின் கேள்வி மோடிக்கு ஆனால் பதில் அமித்ஷா விடமிருந்து!

மே 17, 2019 400

புதுடெல்லி (17 மே 2019): மத்தியில் ஆட்சியமைத்த வரலாற்றில் முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்த மோடி கேள்விக்கு பதிலளிக்காமல் அமித்ஷா பக்கம் திருப்பி விட்டார்.

பிரதமர் மோடி 2014 ல் ஆட்சியில் அமர்ந்தது முதல் இதுவரை எந்த செய்தியாளர்கள் சந்திப்பையும் சந்திக்கவில்லை. இது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் இன்று முதலாவதாக செய்தியாளர்கள் சந்திப்பை வைத்த மோடி, கூடவே பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வை துணைக்கு வைத்துக்கொண்டார்.

செய்தியாளர்கள் கேள்விகள் கேட்டனர். ஆனால் எந்த கேள்விக்கும் மோடி பதிலளிக்கவில்லை, அமித்ஷாவே பதிலளித்தார்.

ஏற்கனவே தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் க்ளவுட், இமெயில், டிஜிட்டல் கேமரா என்று அடித்து விட்ட மோடி தற்போது வாய் திறக்க முடியாமல் அமித்ஷா விடம் பொறுப்பை ஒப்படைத்தது மீண்டும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

நெட்டிசன்களும் எதிர் கட்சிகளும் இந்த பேட்டியை கிண்டலடித்து வருகின்றனர். இது பிரதமரின் பேட்டியல்ல அமித்ஷாவின் பேட்டியில் பிரதமர் கலந்து கொண்டுள்ளார். என்று கிண்டலடிக்கின்றனர். போதாதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இது சிறந்த பேட்டி என்று தன் பங்கிற்கு கிண்டலடித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...