லாலு பிரசாத் யாதவ் மனைவி வீட்டில் பாதுகாப்பு படை வீரர் தற்கொலை!

மே 18, 2019 238

பாட்னா (18 மே 2019): லாலு பிரசாத் யாதவ் மனைவியும் பீகார் முன்னாள் முதல்வருமான ராஃப்ரி தேவி வீட்டில் பாதுகாப்புக்கு இருந்த .ஆர்.பி.எப். படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ராஷ்டரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மனைவியும் பீகார் முன்னாள் முதல் மந்திரியுமான ரப்ரி தேவி பாடான் நகரில் உள்ள சர்க்குலர் சாலை பகுதியில் ஒரு பங்களா வீட்டில் வசித்து வருகிரார்.

முன்னாள் முதல் மந்திரி என்ற வகையில் இவரது வீட்டுக்கு 24 மணி நேரமும் ஆயுதமேந்திய வீரர்கள் காவல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவ்வகையில், நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். படை வீரர் கிரியப்பா கிரசூர்(29) என்பவர் தனது கைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டத்தை சேர்ந்த அந்த வீரரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...