பசு பயங்கரவாதிகளால் ஒரு முஸ்லிம் சுட்டுக் கொலை - காஷ்மீரில் பதற்றம்!

மே 18, 2019 528

ஜம்மு (18 மே 2019): காஷ்மீரில் பசு பயங்கரவாதிகளால் ஒரு முஸ்லிம் சுட்டுப் படுகொலை செய்யப் பட்டதை அடுத்து அங்கு பதற்றம் நிலவுகிறது.

காஷ்மீர் தோதா மாவட்டத்தில் வியாழன் அன்று நயீம் ஷா என்ற முஸ்லிம் பசு பயங்கரவாத கும்பலால் படுகொலை செய்யப் பட்டதை அடுத்து அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

இந்த படுகொலையில் ஐந்து பேருக்கு தொடர்பு இருப்பதாக போலீஸ் தெரிவித்துள்ளது. நயீம் படுகொலை செய்யப் பட்டதை அடுத்து போராட்டம் வெடித்தது. காவல் நிலயம் மீதும் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளன.

நிலமையை கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் அழைக்கப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...