நாடாளுமன்ற தேர்தல் கருத்துக் கணிப்புகள் லீக் - செய்தி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

மே 19, 2019 588

புதுடெல்லி (19 மே 2019): நாடாளுமன்றத் தேர்தல் கருத்துக் கணிப்புகள் லீக்காகியுள்ள நிலையில் கருத்து கணிப்புகளை வெளியிட்ட செய்தி நிறுவனங்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விதிமுறையை மீறி சில செய்தி நிறுவனங்கள் தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன. இதில் ஆளும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை தெரிவிக்கிறது.

இந்நிலையில் ஏற்கனவே தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்திருந்தும், செய்தி நிறுவனங்கள் சில கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளதால் இது விதிமீறல் என்பதாக கூறி தேர்தல் ஆணையம் சம்மந்தப் பட்ட செய்தி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் தொடர்புடைய ட்விட்டர் பதிவுகளையும் நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...