தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுவது என்ன?

மே 20, 2019 589

புதுடெல்லி (20 மே 2019): நாடாளுமன்றத் தேர்தல் அனைத்துக் கட்டங்களும் முடிவடைந்த நிலையில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் நேற்றுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் நேற்று மாலை வெளியாகின. இதில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 280-300 இடங்களை பிடிக்கும் என பெரும்பாலான கருத்து கணிப்புகள் முடிவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2014ல் 38 தொகுதிகளையும் வென்ற அதிமுக இம்முறை, ஒற்றை இலக்க தொகுதியிலேயே வெல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 80 தொகுதிகளை கொண்ட உத்தரப் பிரதேசத்தில் பாஜ கூட்டணி 58 இடங்களையும், சமாஜ்வாடி - பகுஜன்சமாஜ் கூட்டணி 20 இடங்களையும் வெல்லும் என கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு 16-20 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், கேரளாவில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெல்லும் என்று கணிக்கப் பட்டுள்ளது.

இதற்கிடையே தேர்தல் நேரங்களில் வாக்காளர் பட்டியலில் இல்லாமல் போன வாக்காளர்கள் நிலை, காணாமல் போன வாக்குப் பெட்டிகள் என பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில் கருத்துக் கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...