பாஜகவுக்கு ஷாக் கொடுத்த ரிப்போர்ட்!

மே 21, 2019 781

புதுடெல்லி (21 மே 2019): ஊடகங்களின் எக்ஸிட் போல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருந்தாலும் பாஜக அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏழு கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் ஊடகங்கள் தங்கள் கருத்துக்கணிப்பை வெளியிட்டன. பாஜக அணி அதிக இடங்களை பிடிக்கும் என்று தெரிவிக்கப் பட்டது. ஆனால். இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் பொதுமக்களிடையேப் பலக் கேள்விகளை எழுப்பியுள்ளது.

எனினும் கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜக தலைமைக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. ஏனென்றால் பாஜகவுக்கு கிடைத்த ரகசிய ரிப்போர்ட் வேறு விதமாக வந்துள்ளது. அதன்படி பாஜகவுக்கு தனிப்பெரும்பாண்மைக் கிடைக்காது, தொங்கு பாராளுமன்றமே அமைக்க முடியும் என அறிவித்துள்ளது. இதனால் தேர்தல் முடிவுகள் வரும் முன்பே கூட்டணிக் கட்சிகளைத் திரட்டும் முடிவில் இருக்கிறார் அமித்ஷா.

இதற்கிடையே எதிர் கட்சிகளும் ஆட்சி அமைக்க தேவையான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...