இந்திய ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது யார்? - பகீர் தகவல்!

மே 22, 2019 413

ஸ்ரீநகர் (22 மே 2019): கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் நாட்டுடன் நடத்த வான்வெளி சண்டையின் போது இந்திய ஹெலிகாப்டரை வீழ்த்தியது இந்திய படைகளே என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

புல்வாமா தாக்குதலை அடுத்த நிலவி வந்த கடுமையான பிரச்சனை மற்றும் பாலக்கோடு தாக்குதல் காரணமாக இந்த வான் சண்டை நடந்து வந்தது. இந்த நிலையில் பிப்ரவரி 27ம் தேதி காலை இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் எப் -16 போர் விமானங்கள் நுழைந்து தாக்கின. 

இந்த தாக்குதலை அடுத்து அந்த பகுதிக்கு இந்தியாவின் போர் விமானங்கள், வேகமாக பாகிஸ்தான் விமானங்களை சுற்றி வளைத்து தாக்கியது. இந்த சம்பவம் நடந்த போது இந்தியாவின் மிக் 17 ஹெலிகாப்டர் விபத்திற்கு உள்ளானது. இதில் இருந்து 6 விமானப்படை வீரர்களும் பலியானார்கள்.

இந்த நிலையில் இந்த ஹெலிகாப்டரை தவறுதலாக சுட்டு வீழ்த்தியது இந்திய படைகளே என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த விசாரணையில் இந்த ஹெலிகாப்டர் இந்திய ஏவுகணை மூலம்தான் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இந்திய ஹெலிகாப்டரை பாகிஸ்தானுடையது என்று நினைத்து தாக்கி அழித்ததாக தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக இந்திய விமானப்படை துறை ரீதியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். அதன்படி தற்போது இந்திய விமானப்படையின் ஸ்ரீநகர் Air Officer Commanding தற்போது நீக்கப்பட்டுள்ளார். இன்னும் சிலரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் கூறப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...