டிக்டாக் பிரபலம் சுட்டுக் கொலை!

மே 22, 2019 236

புதுடெல்லி (22 மே 2019): டெல்லியில் டிக்டாக் பிரபலத்தை 3 மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.

உடற்பயிற்சியில் அதிக ஈடுபாடு கொண்ட டெல்லியை சேர்ந்த மோகித் மோர் என்பவர் டிக்-டாக் செயலி மூலம் தொடர்ந்து ஃபிட்னஸ் சம்பந்தமான வீடியோக்களை பதிவிட்டு வந்தார். அவருக்கு டிக்-டாக் செயலியில் 5 லட்சம் பின்தொடர்பவர்கள் இருந்தனர். மோர், நஜஃப்கர் அருகேயுள்ள ஒரு இடத்தில்தான் ஜிம்மிற்கு செல்வது வழக்கம். அங்கு அவர் நேற்று ஒரு ஜெராக்ஸ் கடையில் இருந்துள்ளார். அப்போதுதான் அடையாளம் தெரியாத நபர்கள் அவரை சுட்டுக் கொன்றுள்ளனர்.

இந்த கொலை சம்பவத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து போலீஸ் தரப்பு விசாரித்து வருகிறது. கேங் வன்முறை இதற்குக் காரணமா என்ற கோணத்திலும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர், “நாங்கள் மோகித் மோரின் டிக்-டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை பார்த்து வருகிறோம். மேலும், அவரின் கால் பதிவுகளையும் ஆராய்ந்து வருகிறோம். அதில் இருந்து மோகிதிற்கு எதிராக யாராவது செயல்பட்டார்களா என்று விசாரணை செய்துவருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...