வாக்கு எண்ணிக்கையின்போது கலவரம் ஏற்பட வாய்ப்பு!

மே 23, 2019 257

புதுடெல்லி (23 மே 2019): வாக்கு எண்ணிக்கையின் போது கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் காவல்துறை தலைவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23 ஆம் தேதி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...