ராகுல் காந்தி ராஜினாமா - என்ன சொன்னார் சோனியா காந்தி?

மே 23, 2019 337

புதுடெல்லி (23 மே 2019): காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாகவும் அதன் கடிதத்தையும் சோனியா காந்தியிடம் ராகுல் காந்தி கொடுத்துள்ளார்.

நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் கடந்த 19-ம் தேதி முடிவடைந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாயின.

இதில் பாஜக எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வில்லை. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. அப்போது மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக அவர் கூறினார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல்காந்தி தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கூறி கட்சியின் மூத்த தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியுமான சோனியா காந்தியிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்ததாக தெரிகிறது.

ஆனால் அதனை ஏற்க சோனியா காந்தி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இவ்வாராம் நடைபெறும் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...