அசாதுத்தீன் உவைசி சாதனை வெற்றி!

மே 24, 2019 967

ஐதராபாத் (23 மே 2019): மக்களவை தேர்தலில் அசாதுத்தீன் உவைசி பாஜக வேட்பாளரவை விட 282,186 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆல் இந்தியா மஜ்லிஸ் இத்தியாதுல் முஸ்லிமின் கட்சியின் வேட்பாளர் அசாதுத்தீன் உவைசி ஐதராபாத் தொகுதியில் 517,471 வாக்குகள் பெற்றுள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக பாஜக வேட்பாளர் பகவந்த் ராவ் 235,285 வாக்குகள் பெற்றுள்ளர். TRS வேட்பாளர் புஷ்தே ஸ்ரீகாந்த் 64,239 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் ஃபெரோஸ் கான் 49,944 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

அசாதுத்தீன் உவைசிக்கு சென்ற நாடாளுமன்றத்தேர்தலை விட 5 சதவீத வாக்குகள் கூடுதலாக கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...