மீண்டும் தலை தூக்கும் மாட்டுக்கறி விவகாரம் - முஸ்லிம் தம்பதியினர் மீது கொடூர தாக்குதல்!

மே 25, 2019 697

போபால் (25 மே 2019): மாட்டுக்கறி வைத்திருந்ததாக முஸ்லிம் தம்பதியினரை பசு பயங்கரவாதிகள் மரத்தில் அடித்து வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.

மத்திய பிரதேசம் போபாலில், இருந்து 350 கி.மீ தூரத்தில் உள்ள ஒரு பகுதியில் மாட்டுக் கறி வைத்திருந்ததாகக் கூறி முஸ்லீம் மதத்தை சேர்ந்த தம்பதியினரையும் ஒரு ஆணையும் மரத்தில் கட்டி போட்டு செருப்பினால் அடித்துள்ளனனர். மேலும் அடிக்கும் நபர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் போட்டபடி அடித்தனர். இதனை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர்.

தேர்தல் முடிவுகள் வெளியாகி பாஜகவுக்கு சாதகமாக உள்ள நிலையில் அடுத்த நாளே இச்சம்பவம் அரங்கேறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...