ராகுல் காந்தி ராஜினாமா செய்தாரா? - காங்கிரஸ் விளக்கம்!

மே 25, 2019 364

புதுடெல்லி (25 மே 2019): காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் உண்மையில்லை என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நிலையில், ராகுல் காந்தி இன்று தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாக மீடியாக்களில் செய்தி வெளியானது.

இந்நிலையில் இச்செய்தியில் உண்மை இல்லை என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் தெளிவு படுத்தியுள்ளார்.

காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் இன்று தேர்தல் முடிவுகள் குறித்து விவாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...