முத்தலாக் கூறிய கணவர் - இந்து மதத்திற்கு மாறிய முஸ்லிம் பெண்!

மே 26, 2019 1088

லக்னோ (26 மே 2019): முத்தலாக்கால் பாதிக்கப் பட்ட முஸ்லிம் பெண் இந்து மதத்திற்கு மாறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

உத்திர பிரதேசத்தை சேர்ந்த ரேஷ்மா என்ற 29 வயது முஸ்லிம் பெண்ணை கொடுமை படுத்தி வந்த அவரது கணவர், ஒரு கட்டத்தில் ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் கூறியுள்ளார். மேலும் கணவர் குடும்பத்தால் அப்பெண் வீதியில் கொண்டு வந்து விடப் பட்டார். இச்சம்பவம் கடந்த 2019 ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி நடந்துள்ளது. இதனால் அந்த பெண் மிகவும் வேதனை அடைந்துள்ளார். இப்பிரச்சனையை சரி செய்ய பெண் குடும்பத்தினர் முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் இதற்கு சம்மதிக்காத ரேஷ்மா தீபக் என்ற இந்துவை திருமணம் செய்ய ஒப்புதல் அளித்து, தீபக்கை இந்து முறைப்படி திருமணம் செய்டுள்ளார். மேலும் தனது பெயரை ராணி ரத்தோட் என்றும் மாற்றம் செய்துள்ளார்.

ரேஷ்மாவுக்கு 2வயது பெண் குழந்தை உள்ளது. ஆனால் அந்த குழந்தையை ரேஷ்மாவின் முதல் கணவர் கைவசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...