பசு பயங்கரவாதிகளுக்கு கடும் தண்டனை கொடுக்க தயாரா? - மோடிக்கு உவைசி கேள்வி!

மே 26, 2019 468

புதுடெல்லி (26 மே 2019): பிரதமர் மோடி பசு பயங்கரவாதிகளுக்கு கடும் தண்டனை கொடுக்க தயாராக உள்ளாரா? என்று அசாதுத்தீன் உவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடி நேற்று கட்சியினரிடையே உரையாற்றினார். அப்போது நாட்டில் சிறுபான்மையினரிடையே உள்ள அச்ச உணர்வை போக்க வேண்டும். அவர்களிடம் சகோதரத்துவத்தை பேண வேண்டும் என்று பேசினார்.

மோடியின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள அசாதுத்தீன் உவைசி, "பிரதமர் மோடி உண்மையில் சிறுபான்மையினர் மீது சிநேகம் காட்டுபவராக இருந்தால், பசுவின் பெயரால் நடக்கும் படுகொலைகளை முழுமையாக நிறுத்த வேண்டும். மேலும் பசு பயங்கரவாதிகளுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும். இதற்கு பிரதமர் மோடி உறுதி அளிக்க வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.அ

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...