குழந்தைக்கு நரேந்திர மோடி என பெயரிட்டு மகிழ்ந்த முஸ்லிம் தம்பதியினர்!

மே 26, 2019 642

லக்னோ (26 மே 2019): உத்திர பிரதேசத்தில் மே 23 ஆம் தேதி முஸ்லிம் பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு நரேந்திர மோடி என பெயரிட்டு மகிழ்ந்துள்ளனர் தம்பதியினர்.

உத்திர பிரதேசத்தை சேர்ந்த மெஹ்னாஜ் பேகம் என்பவருக்கு தேர்தல் முடிவுகள் வெளியான மே 23 அன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு பெயர் வைக்க திட்டமிட்ட மெஹ்னாஜ் பேகமும் அவரது கணவர் முஸ்தாக் அஹமதும், மீண்டும் பிரதமராகும் மோடியின் பெயரை வைக்க திட்டமிட்டனர். இதற்கு மெஹ்னாஜ் பேகமின் மாமனார் முகமது இத்ரிஸ் ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து குழந்தையின் பெயர் நரேந்திர தோமர் தாஸ் மோடி என பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக செய்தி தொடர்பாளர் ஹரீஸ் ஸ்ரீவஸ்தவா, "இது நல்ல முன்னுதாரணம். இது போன்ற செயல்கள் மோடி மீது முஸ்லிம்கள் கொண்டுள்ள அபிப்ராயங்களில் மாற்றம் ஏற்படும்." என்றார்.

இதற்கிடையே நேற்றைய மோடி உரையில், நமது ஆட்சியில் சிறுபான்மையினர் அச்சமின்றி வாழ , அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...