25 வயது முஹம்மது பர்க்கர் ஆலம் என்ற இளைஞர் ஹரியானாவில் குருகராம் பகுதியில் தையல் கடை நடத்தி வருகிறார். இரவு தொழுகை முடிந்து 10 மணி அளவில் அவருடைய கடைக்கு வரும் வழியில் மர்ம கும்பல் அவரை வழிமறித்து அவருடைய தொப்பியைக் கழட்டச் சொல்லி வலியுறுத்தியுள்ளது. மேலும் பல தகாத வார்த்தைகளால் அவரை திட்டியுள்ளது. மேலும் ஜெய் ஸ்ரீராம், என்று கூற சொல்லியும் வலியுறுத்தியுள்ளது. அதற்கு மறுத்த பர்க்கர் ஆலம் மீது அந்த கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது. மேலும் தொப்பி அணிந்திருந்த அவரின் தொப்பியைக் கழட்டி வீசி எறிந்துள்ளது.
படுகாயம் அடைந்த பர்க்கர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். மருத்துவமனை டாக்டர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பாக்கர் ஆலமிடம் விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப் படவில்லை.