தேர்தல் முடிவுக்குப் பிறகு ராகுல் காந்தியின் அதிரடி பதிவு!

மே 27, 2019 760

புதுடெல்லி (27 மே 2019): தேர்தல் முடிவுக்குப் பிறகு ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.

இந்தியாவின் முதல் பிரதமரும் ராகுல் காந்தியின் கொள்ளு தாத்தாவுமான ஜவஹர்லால் நேருவின் நினைவு நாள் இன்று. இதையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரை நினைவுகூறும் வகையில் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சந்தித்தப் படுதோல்வியைத் தொடர்ந்து ராகுல் பதிவிடும் முதல் ட்வீட் இதுதான். அவரின் ட்வீட்டர் மூலம் சொல்லியிருக்கும் கருத்து பல விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

“இந்தியாவைப் போன்ற பல ஜனநாயக நாடுகள், சீக்கிரமாகவே சர்வாதிகாரப் போக்குக்கு மாறிவிட்டன. நேருவின் நினைவு நாளில், சுதந்திரமான ஸ்திரமான நவீன அமைப்புகளை உருவாக்கி, கடந்த 70 ஆண்டுகளாக ஜனநாயகத்தை தழைத்தோங்கச் செய்ததை நினைவு கூறுவோம்” என்று ட்விட்டரில் கூறியுள்ளார் ராகுல்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...