சிறையில் கதறி அழுத லாலு பிரசாத் யாதவ் - உணவு உண்ண மறுப்பு!

மே 27, 2019 613

பாட்னா (27 மே 2019): நாடாளுமன்றத் தேர்தலில் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி ஒரு இடம் கூட வெற்றி பெறாததால் சிறையில் உள்ள லாலு பிரசாத் யாதவ் சாப்பிட மறுத்து கண்ணீர் விட்டு அழுதார்.

பீகார் மாநிலத்தில் மொத்தம் 40 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா- நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்கும் காங்கிரஸ்-லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் கூட்டணிக்கும் இடையே இந்த 40 தொகுதிகளிலும் கடும் போட்டி ஏற்பட்டது.

இந்த 40 தொகுதிகளில் பாரதிய ஜனதா – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 39 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. ஒரே ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.

லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி 19 இடங்களில் போட்டியிட்டும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நாள் முதல் பாராளுமன்ற தேர்தலில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்த நிலையில் இம்முறை படுதோல்வியை சந்தித்தது லாலு மனதை பெரிதும் பாதித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...