பாஜக தொண்டர் கொலை - மூன்று பேர் மீது சந்தேகம்!

மே 27, 2019 486

அமேதி (27 மே 2019): உத்திர பிரதேசம் மாநிலம் அமேதியில் ஸ்மிரிதி இராணியின் உதவியாளரும் பாஜக தொண்டருமான சுரேந்திர சிங் படுகொலை தொடர்பாக மூன்று பேரை போலீசார் சந்தேகிக்கின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் ஸ்மிரிதி இராணிக்கு, அவரது உதவியாளர் சுரேந்திர சிங் பல்வேறு உதவிகளை செய்து வந்ததாக தெரிகிறது. அமேதி தொகுதியில் ஸ்மிரிதி ராணி வெற்றிப் பெற சுரேந்திர சிங் பிரசாரங்களையும் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், அமேதியில் அடையாளம் தெரியாத 2 பேர் சுரேந்திர சிங்கை துப்பாக்கியால் சுட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சுரேந்திர சிங், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே, சுரேந்திரசிங் கொலையில் தொடர்பிருப்பதாக சந்தேகத்தின் பேரில் 7 பேரை போலீசார் கைது விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே இந்த கொலையில் மூன்று பேருக்கு நேரடி தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் பெயரை வெளியிடவில்லை.

இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஸ்மிரிதி இராணி, சுரேந்திர சிங்கை துப்பாக்கியால் சுட்டவர்களுக்கும் அதற்கு காரணமானவர்களுக்கும் நீதிமன்றத்தில் மரண தண்டனை வாங்கித் தருவேன் என்று தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...