தனக்கு வந்துள்ள புற்று நோயை எதிர்த்து போராடும் ஏழை மாணவி - கைகொடுக்கும் சக மாணவிகள்!

மே 28, 2019 388

ஐதராபாத் (28 மே 2019): ஐதராபாத்தில் ஏழை கல்லூரி மாணவி ஒருவர்  ரத்த புற்று நோயால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில், அவருடை சிகிச்சைக்கு தேவையான தொகையை சக மாணவிகள் வசூல் செய்து உதவி புரிந்து வருகின்றனர்.

ஐதராபாத் டாக்டர் அம்பேத்கர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருபவர் விஜய சஹாரா சாலினி என்ற ஏழை மாணவி. இவருக்கு சமீபத்தில் ரத்த புற்று நோய் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது.

இவரது சிகிச்சைக்காக ரூ 25 லட்சம் தேவைப் பட்டது. ஆனால் அவரது குடும்பத்தினரால் அந்த தொகையை தயார் செய்ய முடியவில்லை. இந்நிலையில் அவருடன் பயிலும் சக கல்லூரி மாணவிகளின் முயற்சியால் தற்போது ரூ 8 லட்சம் வரை தயார் செய்யப் பட்டுள்ளது. மேலும் விஜய சஹாரா சாலினிக்கு சிகிச்சைக்காக தேவைப்படும் மீதமுள்ள தொகையினையும் தயார் செய்து தருவதாக, மாணவிகள் சாலினியின் பெற்றோரிடம் உறுதி அளித்துள்ளனர்.

மாணவிகளின் இந்த செயல் பலரது பாராட்டையும் பெற்றுள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...