முஸ்லிம் இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு!

மே 28, 2019 396

பாட்னா (28 மே 2019): பிகாரில் முஸ்லிம் இளைஞர் மீது ராஜீவ் யாதவ் என்பவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதுகுறித்து இந்து பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய பிரதேசத்தை அடுத்து பீகாரில் கும்பி கிராமத்தில் முஹம்மது காசிம் என்ற இளைஞர் தனது வியாபாரம் தொடர்பாக சில தொகைகளை மோட்டோர் சைக்கிளில் எடுத்துக் கொண்டு சென்று கொன்டிருந்துள்ளார். அப்போது அவரை வழிமறித்த ராஜீவ் யாதவ் என்பவர் காசிமிடம் அவரது பெயரை கேட்டுள்ளார். அதற்கு காசிம் தனது பெயரை கூறியுள்ளார். அப்போது ராஜீவ் யாதவ், " நீ இங்கு இருக்கக் கூடாது பாகிஸ்தான் செல்ல வேண்டும் என்றவாறு கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

படுகாயம் அடைந்த காசிமுக்கு அப்பகுதி மக்கள் யாரும் உதவிக்கு வரவில்லை, தட்டுத் தடுமாறி போலீஸ் ஸ்டேஷன் சென்ற காசிம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து காசிம் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசா வழக்கு பதிவு செய்தனர். எனினும் போலீசார் இதுவரை ராஜீவை கைது செய்யவில்லை.

கும்பி கிராமத்திற்குட்பட்ட பெகுசாராய் தொகுதியில் பாஜக கிரிராஜ் சிங் எம்பியாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...