பாயல் தற்கொலை செய்து கொள்ளவில்லை அவர்கொலை செய்யப்பட்டுள்ளார் - அகிலேஷ் யாதவ் ஆவேசம்!

மே 28, 2019 318

லக்னோ (28 மே 2019): மும்பையில் தற்கொலை செய்து கொண்ட பிற்படுத்தப் பட்ட பெண் விவகாரம் தேசிய அளவில் பேசு பொருளாகியுள்ளது.

மும்பையில் உள்ள டோபிவாலா மருத்துவக் கல்லூரியில் பெண்கள் நல மருத்துவம் படித்து வந்தார் பாயல் சல்மான் தட்வி. இட ஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைத்து மருத்துவம் பயின்று வந்த இவருக்கு மருத்துவராகி பழங்குடியினருக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே கனவாக இருந்தது.

ஆனால் கடந்த 22ஆம் தேதி தூக்கு மாட்டிக் கொண்ட பாயல், தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். அவர் பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால், அவர் கல்லூரியில் துன்புறுத்தலுக்கு ஆளாகி, தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவ்விவகாரம் நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உத்திர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் இதுகுறித்து தெரிவிக்கையில், " பாயல் மாரணம் தற்கொலை அல்ல, அது ஒரு கொலை, உயர் ஜாதியினரின் துன்புறுத்தலுக்கு உள்ளாகியே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனவே, அவருக்கு எதிராக மன உளைச்சளை ஏற்படுத்தியவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப் பட வேண்டும். இதன் மூலம் சாதி ரீதியாக துன்புறுத்துபவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்" என்று தெரிவித்துள்ளார்.

பாயல், சல்மான் என்ற முஸ்லிமை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...