திருமணம் செய்து வைத்த பூசாரியுடன் புது மணப் பெண் தப்பியோட்டம் !

மே 28, 2019 347

போபால் (28 மே 2019): தனக்கு திருமணம் செய்து வைத்த பூசாரியுடன் புது மணப் பெண் தப்பியோடிய சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் டோடி பக்ரோத் சிரோஞ்ச் சிட்டியில், இங்கு உள்ள ஒரு கோவிலில் பூசாரியாக உள்ளவர் விநோத் மகராஜ் அசாத் என்பவர். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் ஒரு ஆணுக்கும் மந்திரம் ஓதி திருமணம் செய்து வைத்தார். இது நடந்தது மே 7 ஆம் தேதி

ஆனால் திருமணம் ஆன 15 நாட்களில் அதே மணப் பெண்ணுடன் பூசாரி மாயமாகியுள்ளார். விசாரணையில் அந்த புது மணப் பெண்ணுக்கும் பூசாரிக்கும் கடந்தத 2 வருடமாக பழக்கம் இருந்து வந்ததாகவும், இந்த நிலையில் இருவரும் மாயமாகியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்தினால் மணமகன் வீட்டார் பெரும் அவமானத்தில் உள்ளனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...