பாஜக வெற்றி பெற்ற தினத்திலிருந்து முஸ்லிம்களுக்கும் தலித்துகளுக்கும் எதிராக தொடர் தாக்குதல்!

மே 29, 2019 476

புதுடெல்லி (28 மே 2019): பாஜக வெற்றி பெற்ற தினத்திலுருந்து முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிராக தொடர் தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றன.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியான மே 23 லிருந்து இதுவரை முஸ்லிம்கள் தலித்துகளுக்கு எதிராக ஐந்து தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

2014 ல் பாஜக வெற்றி பெற்றதிலிருந்தே மாடு பாதுகாப்பு என்ற பெயரில் பசு பயங்கரவாதிகள் முஸ்லிம்களையும், தலித்துகளையும் குறி வைத்து தாக்கினர்.

இந்நிலையில் தற்போது மீண்டும் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில் முஸ்லிம்களுக்கும், தலித்துகளுக்கும் எதிராக அதிகமான தாக்குதல்கள் நடத்தப் படுகின்றன.

பீகாரில் முஸ்லிம் பெயரை கூறிய நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டுள்ளது. அரியானாவில் முஸ்லிம் ஒருவரை ஜெய் ஸ்ரீராம், பாரத் மாதாகி ஜே என உச்சரிக்கச் சொல்லி கடும் தாக்குதலை நடத்தியுளனர்.

குஜராத்தில் தலித் தம்பதியினர் மீது உயர் ஜாதியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். மத்திய பிரதேசத்தில் முஸ்லிம் தம்பதியினர் பசு பயங்கரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். ஜார்கண்டில் மாட்டிறைச்சி சாப்பிட்டதற்காக ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.

இவ்வாறு முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல் குறைந்தபாடில்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...