கல்லூரி வளாகத்துக்குள் ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்துடன் முஸ்லிம் மாணவியிடம் அத்து மீறிய கும்பல்!

மே 29, 2019 1410

கொல்கத்தா (29 மே 2019): மேற்கு வங்கத்தில் கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்த கும்பல் முஸ்லிம் கல்லூரி மாணவியை ஜெய் ஸ்ரீராம் என்று கூறியபடி கிண்டல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

23 வயது முஸ்லிம் மருத்துவ மாணவி மற்றும் அவருடன் படிக்கும் மாணவியுடன் கேண்டீன் சென்று திரும்பியபோது கல்லூரி வளாகத்திற்குள் இருந்த 12 பேர் கொண்ட கும்பல் குறிப்பாக ஹிஜாப் அணிந்த மாணவியை பார்த்து கிண்டல் செய்துள்ளனர். மேலும் விரலை காட்டி, ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டபடி முஸ்லிம் மாணவியிடம் அத்து மீறி நடந்துள்ளனர்.

அச்சத்தில் மாணவி இருவரும் விரைவாக நடந்து தங்குமிடத்திற்கு வந்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகத்திடமும் கூறியுள்ளார். அதேபோல இச்சம்பவம் குறித்து போலீசிலும் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீஸ் மாணவியின் புகாரை ஏற்க மறுத்துவிட்டது.

பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள நிலையில் முஸ்லிம்களுக்கும் தலித்துகளுக்கும் எதிரான தாக்குதல்கள், மற்றும் அத்து மீறல்கள் அதிகரித்துள்ளமை கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...