எம்எல்ஏக்கள் மற்றும் கவுன்சிலர்கள் திரிணாமூல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்!

மே 29, 2019 549

கொல்கத்தா (29 மே 2019): மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை அடுத்து கட்சி தாவல்கள் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மா.கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ. என மொத்தம் 3 பேர் மேற்கு வங்காளம் மாநில சட்டசபை உறுப்பினர்கள் இன்று பாஜகவில் இணைந்தனர்.

மேலும் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள பல்வேறு நகராட்சிகளை சேர்ந்த 50-க்கும் அதிகமான கவுன்சிலர்களும் பாஜகவில் இணைந்தனர்.

டெல்லியில் நடந்த இந்த இணைப்பு நிகழ்ச்சியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வார்கியா, மேற்கு வங்காளத்தை சேர்ந்த அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முகுல் ராய், சமீபத்தில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட அவரது மகன் சுப்ராங்ஷு ராய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...