மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மறுக்கப் பட்டதால் முஸ்லிம் சிறுவன் பலி!

மே 29, 2019 490

ஷாஜஹான்பூர் (29 மே 2019): உத்திர பிரதேசத்தில் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மறுக்கப் பட்டதால் 9 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உத்திர பிரதேசம் ஷாஜஹான்பூரில் அஃப்ரோஸ் என்ற 9 வயது சிறுவனுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அஃப்ரோசின் பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அஃப்ரோசின் உடல் நிலை மோசமாக இருப்பதால் அங்கு சிகிச்சைக்கு உரிய வசதி இல்லாததால் மேல் சிகிச்சைக்காக லக்னோ மருத்துவமனைக்கு டாக்டர்கள் பரிந்துரை செய்தனர்.

ஆனால் அஃப்ரோசை கொண்டு செல்ல அந்த மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் தர மறுத்துவிட்டது. பணம் தருவதாக பெற்றோர் கூறியும் மருத்துவமனை செவி சாய்க்கவில்லை என்று பெற்றோர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அஃப்ரோஸ் உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் வீட்டுக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அஃப்ரோஸ் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...