ஆந்திர முதல்வரக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்பு!

மே 30, 2019 290

புது டெல்லி (30 மே 2019): ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றார்.

ஆந்திர மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 இடங்களைப் பெற்று அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் ஆந்திரா மாநிலத்தின் முதல் மந்திரியாக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பார் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைமை தெரிவித்திருந்தது.

இதனை அடுத்து ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திரா மாநில முதல் மந்திரியாக இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் நரசிம்மன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தமிழகம் சார்பில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் ஆந்திர முதல்வராக பொறுப்பேற்ற ஜெகன் மோகன் ரெட்டிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில், 'ஆந்திர முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டிக்கு என் வாழ்த்துக்கள்.

அவருக்கும், அவரது தலைமையில் ஆட்சி நடத்தவுள்ள புதிய மந்திரிகளுக்கும், ஆந்திர மாநில மக்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்' என பதிவிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...