கோட்சேவுக்கு பாஜக எம்.எல்.ஏ புகழாரம்!

மே 30, 2019 261

புதுடெல்லி (30 மே 2019): பிரக்யா சிங் எம்.பி.யை தொடர்ந்து, ‘கோட்சே தேசியவாதி’ என்று பா.ஜனதா பெண் எம்எல்ஏ உஷா தாக்குர் கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மத்தியபிரதேச மாநிலம் போபால் தொகுதி பா.ஜனதா எம்.பி.யும், மாலேகான் குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளியான பிரக்யா சிங் தாக்குர், மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சே ஒரு தேசபக்தர் என்று கூறியதால் சர்ச்சையில் சிக்கினார். பின்னர் அவர் மன்னிப்பு கோரினார்.

இந்நிலையில், மத்தியபிரதேச மாநிலம் மாவ் தொகுதி பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ.வும், மாநில பா.ஜனதா துணைத்தலைவருமான உஷா தாக்குரிடம் ஒரு செய்தி சேனல் பேட்டி கண்டது. “கோட்சேவை தேசியவாதியாக கருதுகிறீர்களா?” என்று நிருபர் கேட்டதற்கு, “ஆமாம், அவர் தேசியவாதிதான்.

தனது வாழ்நாள் முழுவதும் அவர் நாட்டைப் பற்றிய அக்கறையுடன் இருந்தார். காந்தியை கொலை செய்ய எந்த சூழ்நிலையில் முடிவு எடுத்தார் என்பது அவருக்குத்தான் தெரியும்” என்று உஷா தாக்குர் பதில் அளித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...