பிரதமராக பதவியேற்றார் மோடி!

மே 30, 2019 286

புதுடெல்லி (30 மே 2019): இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி.

மீண்டும் பாஜக அமோக வெற்றி பெற்றதை அடுத்து, ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்பு விழா நடத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. புதுடெல்லி மாநகராட்சியின் தோட்டக்கலை துறை சார்பில், ஜனாதிபதி மாளிகை வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையை சுற்றியுள்ள பகுதிகளிலும் அலங்கரிக்கப்பட்டன.

இந்நிலையில் ஜனாதிபதி மோடிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

வங்காள தேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம், பூடான், கிர்கிஸ்தான், மொரிஷியஸ், கஜகஸ்தான் உள்பட 14 நாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். பதவியேற்பு விழாவையொட்டி ஜனாதிபதி மாளிகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...