EVM உடன் ஒத்துப்போகாத ஒப்புகைச் சீட்டுகள் - அதிர வைக்கும் தகவல்கள்!

ஜூன் 01, 2019 646

புதுடெல்லி (01 ஜூன் 2019): 370க்கும் மேற்பட்ட தொகுதிகளில் EVM எந்திரத்துடன் ஒப்புகைச் சீட்டுகள் ஒத்துப்போகவில்லை என்று தேர்தல் ஆணையம் அதிர வைக்கும் தகவலை வெளியிட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள தகவல்களின்படி காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் ஈவிஎம் இயந்திரத்தில் 12,14,086 வாக்குகள் பதிவாகி இருந்தன. ஆனால், ஒப்புகைச் சீட்டில் 12,32,417 வாக்குகள் எண்ணப்பட்டன. அதாவது, 18,331 வாக்குச் சீட்டுகள் எப்படி வந்தது என்ற கேள்வி எழுகிறது. அதேபோல், தர்மபுரி தொகுதியில், ஈவிஎம் இயந்திரத்தில் 11,94,440 வாக்குகளும், ஒப்புகை வாக்குச் சீட்டில் 12,12,311 வாக்குகள் எண்ணப்பட்டன. அதாவது, 17,871 வாக்குச் சீட்டுகள் கூடுதலாக இருந்துள்ளன. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் ஈவிஎம் இயந்திரத்தில் 13,88,666 வாக்குகளும், ஒப்புகைச் சீட்டில் 14,03,178 வாக்குகளும் எண்ணப்பட்டன. இதில், 14,512 வாக்குகள் கூடுதலாக இருந்தன.

அதேபோல், உத்தரப் பிரதேசத்தில் மதுரா தொகுதியில் ஈவிஎம் இயந்திரத்தில் 10,88,206 வாக்குகளும், ஒப்புகை வாக்குச் சீட்டில் 10,98,112 வாக்குகளும் எண்ணப்பட்டன. அங்கு, 9,906 வாக்குச் சீட்டுகள் கூடுதலாக இருந்துள்ளன. இந்தத் தகவல்கள் அனைத்து தேர்தல் ஆணையத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறாது. அதேவேளை இந்தத் தகவல்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் கேட்டதாகவும், ஆனால் தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க மறுத்துள்ளது.

ஏற்கனவே ஈவிஎம் மோசடியால் மறு பேலட் பேப்பர் முறையில் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில் இந்த அதிரவைக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...