இந்திய விமானப் படை விமானம் திடீர் மாயம்!

ஜூன் 03, 2019 273

புதுடெல்லி (03 ஜூன் 2019): அசாமில் 13 பேருடன் சென்ற இந்திய விமானப் படை விமானம் மாயமாகியுள்ளது.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் இன்று மதியம் 12.25 மணிக்கு அசாம் மாநிலத்திலுள்ள ஜோர்கட் விமானப்படை தளத்திலிருந்து அருணாச்சலபிரதேசம் மெஞ்சுக்கா பகுதிக்கு புறப்பட்டு சென்றது.

இந்த நிலையில் 13 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் குறித்த தகவல்கள் பிற்பகல் 1 மணியிலிருந்து துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ரேடார் சிக்னல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ள நிலையில், விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடபட்டுள்ளது.

மேலும் ஏ.ஏன் 32 ரக விமானத்தை தேடும் பணியில் இந்திய போர்படை விமானங்களான சுகோய் 30 மற்றும் சி 130 சிறப்பு ரக விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...