காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் உவைசி கட்சி பிரமுகர் கைது!

ஜூன் 03, 2019 451

சோலாப்பூர் (03 ஜூன் 2019): காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் அசாதுத்தீன் உவைசியின் (AIMIM) கட்சி பிரமுகர் தவ்பீக் சேக் கைது செய்யப் பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் பீஜப்பூர் அருகே கடந்த மே மாதம் 17 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் ரேஷ்மா பட்னேக்கர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். கொலையாளி ரேஷ்மாவை நதி ஒன்றில் விசி விட்டு சென்றிருந்தார்.  இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலையாளியை தேடி வந்தனர்.

முன்னதாக உவைசி கட்சிப் பிரமுகர் தவ்பீக் என்பவர் அரசியல் காரணங்களால் ரேஷ்மாவுக்கு மிரட்டல் விடுத்ததாக, ரேஷ்மா தவ்பீக் மீது போலீசில் புகார் அளித்திருந்தா. இந்நிலையில்தான் ரேஷ்மா கொலை செய்யப் பட்டுக் கிடந்துள்ளார். இதனை, ரேஷ்மாவின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் தவ்பீக் சேக் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...