நோயாளியை தாக்கும் டாக்டர் - வைரலாகும் வீடியோ!

ஜூன் 04, 2019 340

ஜெய்ப்பூர் (04 ஜூன் 2019): ஜெய்ப்பூரில் டாக்டர் ஒருவர் நோயாளியை தாக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

ஜெய்ப்பூரில் ஸவாய் மான்சிங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்நிலையில், ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நோயாளிகள் நிறைய பேர் படுக்கையில் படுத்துள்ளனர். அப்போது, இந்த ஆஸ்பத்திரியில் ஒருவர் உள்நோயாளியாக வந்து சேர்ந்துள்ளார். அவரும் படுக்கையில் படுத்து கொண்டிருக்கிறார்.

அப்போது ஒரு டாக்டர் வருகிறார். ஆபரேஷன் செய்யும்போது முகத்துக்கு அணியும் மாஸ்க் ஒன்றினை கட்டியுள்ளார். அதனால் அவர் முகம் சரியாக தெரியவில்லை. அங்கு படுக்கையில் படுத்திருந்த அந்நபரை சரமாரியாக அடித்து உதைக்கிறார்.

ஆனால் எதற்காக அடிக்கிறார்? என்பது குறித்து இதுவரை விளக்கம் இல்லை. எனினும் ஒரு நோயாளியை டாக்டர் எப்படி அடிக்கலாம் என்பது தற்போது பரவலாக பேசப் பட்டு வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...