பெருநாள் தொழுகை தொழுதவர்கள் மீது கார் புகுந்ததில் 17 பேர் படுகாயம்!

ஜூன் 05, 2019 494

புதுடெல்லி (05 ஜூன் 2019): டெல்லியில் இன்று நோன்புப் பெருநாள் தொழுகை தொழுது கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது கார் புகுந்ததில் 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப் பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று காலை அனைத்து பகுதிகளிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. டெல்லியில் குர்ஜி பகுதியில் மசூதி ஒன்றில் தொழுகை நடைபெற்றபோது, மசூதியில் இடம் இல்லாததால் முஸ்லிம்கள் சாலைகளில் தொழுது வந்தனர்.

இந்நிலையில் அப்பகுதியில் வேகமாக வந்த கார் ஒன்று தொழுது கொண்டிருந்த மக்கள் மீது புகுந்தது. இதில் 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

பெருநாள் தொழுகையில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் சாலைகளையும் தொழுகைக்காக பயன் படுத்துவது வழக்கம். ஆனால் இது தெரிந்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவர செய்யப் படவில்லையோ என்றே அச்சப்பட தோன்றுகிறது.

இதனிடையே தொழுகைக்காக வந்த முஸ்லிம்கள் இச்சம்பவத்தை கண்டித்து உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்மந்தப் பட்ட வாகன ஓட்டியை போலீசார் கைது செய்துள்ளதாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.

இவ்விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...