பிரதமர் மோடி, ராகுல் காந்தி - ரம்ஜான் பண்டிகை வாழ்த்து!

ஜூன் 05, 2019 353

புதுடெல்லி (05 ஜூன் 2019): இந்தியாவில் இன்று ரம்ஜான் பண்டிகை தினத்தை ஒட்டி பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நாடெங்கும் இன்று ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப் பட்டு வருகிறது. இந்நிலையில் ரம்ஜான் பண்டிகை தினத்தை ஒட்டி, மோடி தனது வாழ்த்து செய்தியில், "இந்த நன்னாளில் ஒற்றுமை, சகோதரத்துவம், சமாதானம் ஆகியவற்றை தூண்டும் வகையில் அமைய அனைவரையும் வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல, மத்திய அமைச்சர் அமித் ஷா, ஸ்மிரிதி இராணி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...