நிதிஷ் குமார் - பாஜக கூட்டணியில் விரிசல்?

ஜூன் 05, 2019 482

பாட்னா (05 ஜூன் 2019): நிதிஷ் குமார் இஃப்தார் விருந்தில் கலந்து கொண்டதை மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் விமர்சனம் செய்துள்ள நிலையில் பாஜக நிதிஷ் குமார் இடையே விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

பிகாரில் நடைபெற்ற இஃப்தார் விருந்தில் நிதிஷ் குமார் மற்றும் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோர் கலந்து கொண்டதை கிரிராஜ் சிங் விமர்சனம் செய்திருந்தார். கிரிராஜ் சிங் வெளியிட்ட ட்வீட்டில், நமது மதத்தை ஏன் விட்டுத் தருகிறோம். பிற மதத்தினரின் கொள்கைகளையும், வழிபாட்டையும் ஏன், பெரிதுபடுத்தி, வெளிக்காட்டுகிறோம். நவராத்திரிக்கு ஏன் இப்படி இணைவதில்லை. இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பாட்னாவில், ரம்ஜான் தொழுகைக்கு பிறகு முஸ்லீம்களுடனான சந்திப்பை நிகழ்த்தினார், நிதிஷ் குமார். பிறகு அவர் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில்,கிரிராஜ் சிங், நான் எந்த பதிலும் உங்களுக்கு சொல்ல மாட்டேன். ஊடகங்கள் அவர்களை ஃபோகஸ் செய்ய வேணடும் என்பதற்காக சில விஷயங்களை தேவையின்றி செய்வார்கள். அவர்களுக்கு எந்த மதமும் கிடையாது. ஒவ்வொரு மதமும் மரியாதை, ஒருவருக்கொருவர் அன்பு காட்ட கற்றுக் கொடுத்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

பாஜக நிதிஷ் குமார் கூட்டணியை பலரும் பலவிதமாக விமர்சனம் செய்து வரும் நிலையில் இரு கட்சியினரிடையே ஏற்பட்டுள்ள உரசல் மேலும் விரிசலை ஏற்படுத்தக் கூடும் என எதிர் பார்க்கப் படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...