காங்கிரஸுக்கு அடிமேல் அடி - எம்.எல்.ஏக்கள் காங்கிரஸிலிருந்து விலகுவதாக முடிவு!

ஜூன் 07, 2019 530

ஐதராபாத் (07 ஜூன் 2019): தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் 12 பேர் கட்சியிலிருந்து விலகுவதாக முடிவெடுத்துள்ளனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வி பலரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. ஈவி எம் மோசடி இருக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் பேலட் முறையை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் இவ்விவகாரத்தில் அமைதி காப்பது மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தெலுங்கானா மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சட்டமன்ற சபாநாயகரை சந்தித்துள்ளனர். இவர்கள் அனைவரும் தெலுங்கானா ராஸ்டிர சமிதி (TRS) கட்சியில் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே ராகுல் காந்தி தனது ராஜினாமா முடிவை மாற்றி கட்சியை வலுப்படுத்த முயல வேண்டும் என்ற கோரிக்கை கடுமையாக எழுந்துள்ளது.

UPDATED: காங்கிரஸ் 12 எம்.எல்.ஏக்களும் டிஆர்எஸ் கட்சியில் இணைந்துள்ளனர். மேலும் இவர்கள் அனைவரும் டிஆர்எஸ் எம்.எல்.ஏக்கள் என்றே அறியப்படுவர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...