உபியில் நடந்த கொடூரம் - 2 வயது குழந்தை கொடூர படுகொலை!

ஜூன் 08, 2019 218

அலிகார் (08 ஜூன் 2019): உத்திர பிரதேசம் மாநிலம் அலிகாரில் 2 வயது குழந்தை படுகொலை செய்யப்பட்டுள்ள நாட்டையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் அலிகார் மாவட்டத்தில் ஒரு தம்பதியினர் ஜாகீத் என்பவரிடம் பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். கடனை சொன்ன காலக்கெடுவுக்குள் கட்ட இயலாததால் அந்த தம்பதியினரின் 2 வயது குழந்தை ட்விங்கிள் ஷர்மாவை கடத்தி சென்றுள்ளனர் ஜாகித்தும் அவரது கூட்டாளியும். கடத்தி சென்ற குழந்தையை கண்களை நோண்டி, கழுத்தை நெறித்து கொன்றதோடு மட்டுமல்லாமல், துண்டு துண்டாக வெட்டி ஒரு பையில் போட்டு வீசியெறிந்துள்ளனர். இந்த படுபாதக செயலை கண்டித்து இந்தியாவெங்கும் உள்ள பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். பல சினிமா நடசத்திரங்களும் ட்விங்கிள் ஷர்மாவுக்கு நீதி கிடைக்கவேண்டும் என வலியுறுத்தி ஹேஷ்டேகுகளை ட்விட்டரில் பதிவிட்டனர்.

இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் “அலிகாரில் குழந்தையை கொடூரமாக கொன்றது உத்தர பிரதேசத்தை மட்டுமல்ல என்னையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இவ்வளவு கொடூரமாக இரக்கமற்று ஒரு குழந்தையை ஒரு மனிதன் கொல்வானா? இந்த குற்றத்தை தண்டிக்காமல் விடக்கூடாது. உத்தர பிரதேச போலீஸார் உடனடியாக குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும்.” என ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.

அதேபோல பிரியங்கா காந்தியும் இந்த கொடூர கொலையை கடுமையாக கண்டித்துள்ளார். மேலும் நடிகர் அபிஷேக் பச்சனும் இந்த கொலையை கடுமையாக கண்டித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...