வெளிநாட்டில் மருத்துவம் படிக்க விரும்புபவர்களுக்கும் வந்தது ஆப்பு!

ஜூன் 08, 2019 589

புதுடெல்லி (08 ஜூன் 2019): வெளிநாட்டில் மருத்துவம் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களும் நீட் தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய மருத்துவ கவுன்சிலின் நிர்வாக குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவின்படி, மத்திய அரசின், வெளிநாட்டு மருத்துவ படிப்புக்கான சட்டத்திலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, மத்திய சுகாதார துறையில் தகுதி சான்றிதழ் பெற்று, வெளிநாடுகளுக்கு சென்று, மருத்துவம் படிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிப்பை முடித்துவிட்டு, இந்தியாவில் பணியாற்ற விரும்பினால், இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும், சோதனை தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...