சோனியா காந்திக்கு பிரசவம் பார்த்த நர்ஸை சந்தித்து மகிழ்ந்த ராகுல் காந்தி!

ஜூன் 09, 2019 356

வயநாடு (09 ஜூன் 2019): தன் தாய் சோனியா காந்திக்கு பிரசவம் பார்த்த நர்ஸ் ராஜம்மாவை பார்த்து கட்டிப் பிடித்து மகிழ்ந்தார் ராகுல் காந்தி.

ராஜீவ் காந்தி - சோனியா தம்பதியரின் மூத்த மகனாக 19-6-1970 அன்று ராகுல் காந்தி பிறந்தார். தற்போது காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக பதவி வகிக்கும் ராகுல் காந்தி, கடந்த பாராளுமன்ற தேர்தலில் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிட்டு 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வயநாடு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கடந்த இரு நாட்களாக ராகுல் காந்தி இங்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

சுல்தான் பத்தேரி உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று திறந்த வாகனத்தில் சென்று மக்களை சந்தித்த அவர் இன்று கோழிக்கோடு பகுதிக்கு வந்தார். அப்போது, சோனியா காந்தியின் தலைப்பிரசவத்தின்போது நர்சாக இருந்து உதவிய செவிலி ராஜம்மா என்பவர் பணி ஓய்வுக்கு பின்னர் கோழிக்கோட்டில் இருப்பதை அறிந்த ராகுல், அவரை சந்திக்க விருப்பம் தெரிவித்தார். இதைதொடர்ந்து, அவரது வீட்டுக்கு சென்ற ராகுல், தனக்கு பிரசவம் பார்த்த ராஜம்மாவை கட்டித்தழுவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...