மேற்கு வங்கத்தில் பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் மோதல் - 8 பேர் பலி!

ஜூன் 09, 2019 269

கொல்கத்தா (09 ஜூன் 2019): மேற்கு வங்காளத்தில் பாரதிய ஜனதா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்

மேற்கு வங்காளம் மாநிலத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் யாரும் எதிர் பார்க்காத அளவில், பாஜக 18 இடங்களில் வெற்றி பெற்றது அம்மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது.

அம்மாநிலத்தில் தேர்தலுக்கு பின்னர் வெற்றி ஊர்வலங்கள் நடத்த கூடாது என முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில், தினஜ்பூர் மாவட்டத்துக்குட்பட்ட கங்காராம்பூர் பகுதியில் நேற்று வெற்றி ஊர்வலம் நடத்திய பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது.

இதனிடையே, வடக்கு 24 பர்கனஸ் மாவட்டம் சண்தேஷ்காலை பகுதி அருகே உள்ள நயஓட்டில் நேற்று இரவு பா.ஜனதா - திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது. இதில் 8 பேர் பலியாகியுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் தொடங்கியது முதலே இரு தரப்பினருக்கும் மோதல் அதிகரித்த வண்ணமே உள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...