அரபிக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை - புயலாக மாறும் அபாயம்!

ஜூன் 10, 2019 294

சென்னை (10 ஜூன் 2019): அரபிக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையானது புயலாக மாறும் அபாயம் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லட்சத் தீவை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிஉள்ளது. இது புயலாக மாறும் அபாயம் உள்ளது. இதனால் ஜூன் 12 ஆம் தேதி மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட கேரள பகுதிகளில் மிகுந்த கனமழை பெய்யலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...