சுஷ்மா சுவராஜ் ஆந்திர மாநில கவர்னராகிறார்!

ஜூன் 10, 2019 309

புதுடெல்லி (10 ஜூன் 2019): முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆந்திர மாநில கவர்னராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோடி தலைமையிலான கடந்த ஆட்சியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ், இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிடவில்லை. தனது உடல்நலம் கருதி மீண்டும் தேர்தலில் போட்டியிடவில்லை என்று சுஷ்மா ஸ்வராஜ் விளக்கமளித்தார்.

இந்த நிலையில் சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் ஆந்திர மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டிருப்பதாக சற்றுமுன் செய்திகள் வெளியாகியுள்ளது. ஆந்திர ஆளுநரான நரசிம்மனுக்கு பதிலாக சுஷ்மா சுவராஜ் அவர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சற்றுமுன் உத்தரவு பிறப்ப்பித்துள்ளார்.

இன்று ஆந்திர மாநில கவர்னராக இருந்த நரசிம்மன், டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர்களை சந்தித்ததை அடுத்தே இந்த அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் ஆட்சி மாறியதை அடுத்தே நிர்வாக வசதிக்காக கவர்னரும் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...