அரபிக்கடலில் உருவான வாயு புயல் குஜராத்தில் கரையைக் கடக்கிறது!

ஜூன் 11, 2019 259

சென்னை (11 ஜூன் 2019): அரபிக்கடலில் உருவாகியுள்ள 'வாயு' புயல் குஜராத்தில் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில், கோடை வெயிலின் தாக்கம் குறைந்து, பருவக்காற்று வலுவாக வீசுகிறது. ஜூன், 9ல் கேரளாவில் பருவமழை துவங்கியுள்ளது. அரபிக்கடலில் மாலத்தீவு அருகே, நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த தாழ்வு மண்டலம், அரபிக் கடலில்...இன்று புயலாக மாறுகிறது. புயலுக்கு, இந்தியா வழங்கியுள்ள, 'வாயு' என்ற, பெயர் வைக்கப்படுகிறது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: தென் கிழக்கு அரபிக்கடலில் வாயு புயல் உருவானது. இந்த புயல் கரையை கடக்கும் போது 130 கி.மீ. முதல் 140 கி.மீ.வரை காற்றின் வேகம் இருக்கும் இந்த புயல் நாளை மறுநாள் (ஜூன் 13) குஜராத் மாநிலம் போர்பந்தருக்கும், மகுவாக்கும் இடையே கரையை கடக்கும்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...